மேலும் செய்திகள்
சிறுவாபுரி கோவில்களில் துாய்மை பணியில் 305 பேர்
27-Jan-2025
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சிவபெருமான் உலகை காக்க வேண்டிய ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி தேவி மடியில் உறங்குவது போன்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில், நாளை, மேற்கண்ட கோவிலில் சுத்தம் செய்ய உள்ளனர்.காலை 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை கோவில்களை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து, திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, உற்சவர் சிவபெருமானை சுமந்து, திருமுறைகள் பாடி, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, அடியார்கள் புடைசூழ விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற உள்ளது.மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துணிப்பை வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கோவிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள், மாலை 4:00 மணிக்கு பன்னிரு திருமுறை பாராயணம் பாடி, கூட்டுப் பிராத்தனையுடன் மஹா சிவராத்திரி வழிபாடு நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
27-Jan-2025