உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக்கில் இருந்து விழுந்த பொம்மை வியாபாரி பலி

பைக்கில் இருந்து விழுந்த பொம்மை வியாபாரி பலி

திருவாலங்காடு:காஞ்சிபுரம் மாவட்டம் மூலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்கன், 60. இவர், 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' இருசக்கர வாகனத்தில் பொம்மை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 12ம் தேதி திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை சந்தையில் வியாபாரம் செய்து விட்டு, இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி சென்றார்.சின்னக்களக்காட்டூர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ