உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் பயணியர் நிழற்குடை அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

திருத்தணியில் பயணியர் நிழற்குடை அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் கமலா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, சென்னை, சித்துார், வேலுார், திருவள்ளூர், திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களுக்கு நுாற்றுக்கணக்கான பயணியர் காத்திருந்து பேருந்துகளில் செல்கின்றனர்.இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணயர் நிழற்குடை இல்லாமல் பயணியர் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் பேருந்து நிறுத்தத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 23.50 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து, குளிர்சாதன நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நட்டார்.இதையடுத்து ஒப்பந்தாரர் நேற்று நிழற்குடை அமைப்பதற்கு ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் பள்ளம் தோண்டிய போது, அப்பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் தன் கடைக்கு இடையூறாக நிழற்குடை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். தனிநபருக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து நிழற்குடை அமைப்பதற்கு பணி துவங்க விடாமல் தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் மற்றும் போலீசார் வந்து, நிழற்குடை அமைக்கும் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. நெடுஞ்சாலை துறையின் அனுமதியுடன் நிழற்குடை அமைக்கப்படுகிறது. தடுக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். பின் பணி துவங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ