உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூர் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை இழப்பீடு வழங்க வியாபாரிகள் வலியுறுத்தல்

மீஞ்சூர் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை இழப்பீடு வழங்க வியாபாரிகள் வலியுறுத்தல்

மீஞ்சூர்: மீஞ்சூர் ரயில்வே மேம்பாலத்தின், இணைப்பு சாலை பணிக்கு இடையூறாக உள்ள வீடு, கடைகளை அகற்ற உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே, மீஞ்சூர் - காட்டூர் சாலையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு, அதன் இருபுறமும் இணைப்பு சாலைக்கான பணி நடக்கிறது. இதில், காட்டூர் சாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள, 33 வீடு மற்றும் கடைகள், மேற்கண்ட மேம்பால பணிகளுக்கு இடையூறாக இருப்பதால், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காவல் துறை, வருவாய், நெடுஞ்சாலை, மின்வாரியம், பேரூராட்சி நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். காட்டூர் சாலையில், இணைப்பு சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள வீடு மற்றும் கடைகளை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு தரும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அப்போ து வியாபாரிகள் சங்கத்தினர், 'மேற்கண்ட இடத்தில் வசிப்பவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதன் பின், நாங் களே கட்டடங்களை இடித்து தந்துவிடுகிறோம்' என தெரிவித்தனர். இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ