உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அத்திப்பட்டில் மின்ஒயர் அறுந்ததால் 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

அத்திப்பட்டில் மின்ஒயர் அறுந்ததால் 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

மீஞ்சூர்:சென்னை சென்டரல் -கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், மின்சார புறநகர் ரயில்கள், வடமாநிலங்களுக்கு சென்று வரும் விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் என, தினமும், 150க்கும் அதிமான ரயில் போக்குவரத்து உள்ளது.கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு சென்னை சென்று வர புறநகர் ரயில்களில் பயணிக்கின்றனர்.நேற்று காலை, 7:50 மணிக்கு அத்திப்பட்டு புதுநகர் - எண்ணுார் ரயில் நிலையங்களுக்கு இடையே, திடீரென ரயில்வே உயர் அழுத்த மின்பாதையில் இருந்த மின்சார ஒயர் அறுந்து விழுந்தது.மின்சாரம் தடைபட்டதால், சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்ல வேண்டிய புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கமின்றி எண்ணுார், கத்திவாக்கம், திருவொற்றியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.உடனடியாக ரயில்வே மின்பாதை பராமரிப்புத்துறையினர் வந்து அறுந்து கிடந்த மின் ஒயரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மூன்று மணிநேரத்திற்கு பின், அறுந்த மின் ஒயர்கள் இணைக்கப்பட்டு, காலை, 10:50 மணிக்கு மின்பாதை சீரானது. அதையடுத்து ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டன.'பீக் அவர்ஸ்' எனப்படும் பரபரப்பான காலை நேரத்தில், மூன்று மணிநேரம் புறநகர் ரயில் போக்குவரத்து பாதித்ததால், பணிக்கு செல்பவர்கள், வியாபாரிகள், கல்லுாரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவதிக்கு உள்ளாயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை