உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பனி மூட்டத்தால் ஊர்ந்து சென்ற ரயில்கள்

பனி மூட்டத்தால் ஊர்ந்து சென்ற ரயில்கள்

திருவாலங்காடு:திருவள்ளூர் நகரம் முழுதும், நேற்று காலை பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது. காலை 9:00 மணி வரை மூடுபனி நிலவியது.இதன் காரணமாக, சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், போக்குவரத்து பாதித்தது. ரயில்களின் முகப்பு விளக்கினை ஒளிரவிட்டு, தண்டவாளத்தில் மெதுவாக ஊர்ந்து சென்றன. திருவாலங்காடு, மணவூர் பகுதிகளில் நேற்று காலை திடீர் பனி மூட்டம் அதிகரித்து. இதனால் ரயில்கள் தாமதமாக சென்றன. மேலும் அரக்கோணம் --- சென்னை மார்க்கத்தில் காலையில் புறப்பட வேண்டிய 20க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள், மற்றும் எக்ஸ்பிரஸ்கள் ஊர்ந்தபடி ஒலி எழுப்பியவாறு சென்றன.அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல், கடற்கைர , வேளச்சேரி செல்லும் ரயில்கள், 20 - நிமிடங்கள் தாமதமாக சென்றன.திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, செங்குன்றம், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை சாலைகளில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது.வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு மெதுவாக சென்றனர். இதனால், வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர்.திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களில் அதிகாலை முதல் காலை, 7:00 மணி வரை பனிப்பொழிவு அதிகளவில் உள்ளது. நேற்று வழக்கத்திற்கு மாறாக திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில், நள்ளிரவு முதல் காலை, 8:00 மணி வரை பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் முகப்பு விளக்கு எரியவிட்டும் சரியாக வாகன இயக்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.அதே போல் பனிப்பொழிவால் திருத்தணி மலைக்கோவில் மற்றும் ராஜகோபுரம் முழுதும் பனிமூட்டம் காணப்பட்டதால் கோவில் மறைந்திருந்ததை பார்க்க முடிந்தது. பனிமூட்டத்தால் விவசாயிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் சிரமப்பட்டு தங்களது வேலைகளை கவனித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ