திருத்தணி நகராட்சி பகுதியில் திரியும் நாய்களால் தொல்லை
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 193 தெருக்களில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில, மாதங்களாக ஒவ்வொரு தெருவிலும், 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன.நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுவதற்கு நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்டத்தில் பிற நகராட்சியில் நாய்கள் பிடித்து கருத்தடை செய்வதற்கு தனிக்குழு அமைத்துள்ளது.ஆனால் திருத்தணி நகராட்சியில் நாய்களை பிடிக்காமல் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் கடும் அவதிப் படுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் ஒரு முறை திருத்தணி நகரில் நேரில் வந்து ஆய்வு செய்து, நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.