உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ரயில் பாதையில் சுரங்கப்பாதை பணி தீவிரம்

 ரயில் பாதையில் சுரங்கப்பாதை பணி தீவிரம்

பள்ளிப்பட்டு: நகரி - திண்டிவனம் ரயில் பாதையில், பள்ளிப்பட்டு அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நகரியில் இருந்து திண்டிவனம் வரை ரயில்பாதை அமைக்கும் பணி, பள்ளிப்பட்டு பகுதியில் இரண்டு ஆண்டுகளாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில், பொதட்டூர்பேட்டை, மேலப்பூடி, சொரக்காய்பேட்டை உள்ளிட்ட பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும், பொதட்டூர்பேட்டையில் ரயில் நிலைய கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதட்டூர்பேட்டையில் இருந்து நகரி செல்லும் வழியில் பாண்டரவேடு அருகே, ரயில் பாதையின் குறுக்கே வாகன போக்குவரத்துக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி, முழுவீச்சில் நடந்து வருகிறது. பள்ளிப்பட்டு மார்க்கத்தில் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த தச்சூர் -- சித்துார் ஆறுவழி சாலை பணி, தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், நகரி -- திண்டிவனம் ரயில்பாதை திட்டமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை