வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, வடமாநில தொழிலாளியை வழி மறித்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர். பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித், 29. கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் கிராமத்தில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 24ம் தேதி இரவு, பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள், அஜித்தை வழி மறித்து, அவரது மொபைல் போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், வழிபறியில் ஈடுபட்ட எளாவூர் மதன், 21, கிரிதரன், 23, ஆகியோரை கைது செய்தனர்.