உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் திருடிய இருவர் கைது

பைக் திருடிய இருவர் கைது

பேரம்பாக்கம். கடம்பத்துார் ஒன்றியம், கூவம் பகுதியைச் சேர்ந்தவர்தனிகேசன், 40. இவர், நேற்று முன்தினம், பேரம்பாக்கம் பஜார் பகுதியில் வீட்டிற்கு பொருட்கள் வாங்க, 'ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில் வந்தார். பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.இந்நிலையில் அதே பகுதியில், மற்றொரு இருசக்கர வாகனத்தை திருட முயன்றவரை அப்பகுதிவாசிகள் பிடித்து வைத்தனர். தகவலறிந்த மப்பேடு போலீசார் அந்த நபரை மீட்டு நடத்திய விசாரணையில், அவர், நயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், 29, என்பது தெரிய வந்தது. அவர் திருடிய இருசக்கர வாகனத்தை, நண்பரான நயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமார், 42, என்பவரிடம், கொடுத்தது தெரிய வந்தது.மப்பேடு போலீசார், இருவரையும் கைது செய்து, இருசக்கர வாகனத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை