உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் நாட்டு வெடி, கஞ்சா போதை மாத்திரையுடன் இருவர் கைது

திருவள்ளூரில் நாட்டு வெடி, கஞ்சா போதை மாத்திரையுடன் இருவர் கைது

திருவள்ளூர்:நாட்டு வெடிகுண்டு, கஞ்சா, போதை மாத்திரைகளுடன் சுற்றித்திரிந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் நகராட்சி எதிரே உள்ள வி.எம்.நகரில், நேற்று காலை திருவள்ளூர் நகர போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நின்று கொண்டிருந்த இருவரை, சந்தேகத்தின்படி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏகாட்டூரைச் சேர்ந்த முகம்மது காலித், 22, மற்றும் திருநின்றவூர் பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜீத், 26, என தெரிய வந்தது. இவர்கள் இருவரும், அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம், ஒரு மாதங்களுக்கு மேலாக வாடகை வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார், நான்கு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 50 கிராம் கஞ்சா, 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், இருவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !