உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரு குடிசை வீடுகள் தீ வைத்து எரிப்பு

இரு குடிசை வீடுகள் தீ வைத்து எரிப்பு

கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியம் புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ், 50; விவசாயி. இவருக்கும், ஆகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிவராஜ் வீட்டிற்கு வந்த ஆகாஷ், பெட்ரோல் நிரப்பப்பட்ட மூன்று பீர் பாட்டிலை வீசி விட்டு, அவரது தாய் காந்தாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். மாலை 6:30 மணிக்கு சிவராஜின் விவசாய நிலத்திற்கு நண்பர்களுடன் வந்த ஆகாஷ், அங்கிருந்த குடிசை வீட்டை தீ வைத்து கொளுத்தினார். இதில், குடிசையிலிருந்த 10,000 ரூபாய் மதிப்பிலான விவசாய உரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.தொடர்ந்து, அருகில் இருந்த பார்த்திபன் என்பவரது விவசாய நிலத்திலிருந்த குடிசைக்கு தீ வைத்ததில், ௧ லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை