காப்பகத்தில் தங்கியிருந்த இரு மூதாட்டிகள் உயிரிழப்பு
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில், அன்னை அன்பாலாயா அறக்கட்டளை உள்ளது.நெடுஞ்சாலை மற்றும் சிக்னல் பகுதியில் பிச்சை எடுக்கும் நபர்களை மீட்டு, ஆதரவளிக்கும் காப்பகமாக செயல்படுகிறது. இங்கு, 35ஆதரவற்றவர்கள் உள்ளனர். சுகந்தி, 75, என்பவர் கடந்த, இரண்டு வருடங்களாகவும், ராணி, 67, என்பவர் ஒரு வருடமாகவும் காப்பக பராமரிப்பில் இருந்து வந்தனர்.உடல்நலம் பாதிப்பில் இருந்த இருவரும் நேற்று முன்தினம் இரவு துாங்க சென்ற நிலையில், நேற்று காலை எழுந்திருக்கவில்லை. இரவு இறந்தது தெரிந்தது.இது குறித்து அறக்கட்டளை நிர்வாகம், மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இருவரது முகவரியும் தெரியாத நிலையில், போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.