உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரியில் பைக் மோதி பெண் உட்பட இருவர் பலி

லாரியில் பைக் மோதி பெண் உட்பட இருவர் பலி

கும்மிடிப்பூண்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஆடிட்டிங் அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் குழுவாக சுற்றுலா செல்வது வழக்கம்.நேற்று, ஆந்திர மாநிலம் தடா அடுத்த வரதயப்பாளையம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்காக, 10பேர் ஐந்து பைக்குகளில் புறப்பட்டனர்.இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் மகள் ஆனிமோல், 21, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ், 21, ஆகியோர் டி.வி.எஸ் ஸ்கூட்டி பைக்கில் சென்றனர்.நேற்று காலை, 8:00 மணிக்கு சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். கவரப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில் முன்னாள் சென்ற எய்ச்சர் லாரி டிரைவர் திடீரென அதன் வேகத்தை குறைத்துள்ளார்.அதே நேரம் பின்னால் பயணித்த சந்தோஷ் ஓட்டி சென்ற பைக் லாரியில் மோதி விபத்தில் சிக்கியது. இருவரும் தலைக்கவசம் அணியாத நிலையில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ஆனிமோல் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சந்தோஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்த விபத்து குறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ