டூ- விலர்கள் மோதல் மூவர் படுகாயம்
திருத்தணி:திருத்தணி காந்திரோடு பகுதி சேர்ந்தவர் தினேஷ், 25. இவர் நேற்று மாலை தன் மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தார். பின், மத்துார் மகிஷா மர்த்தினி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், தினேஷ், முருக்கம்பட்டு சேர்ந்த முருகன், 20, ஆர்.கே.பேட்டை ராஜாநகரம் சேர்ந்த புருஷோத்தமன், 20 ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். தினேஷ் மனைவி காயமின்றி தப்பினார்.அவ்வழியாக சென்றவர்கள் மேற்கண்ட மூவரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.