உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ - வீலரில் சென்றவர் லாரியில் சிக்கி பலி

டூ - வீலரில் சென்றவர் லாரியில் சிக்கி பலி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே, மகாலிங்க நகர் பகுதியில் வசித்தவர் நாகராஜ், 28; பால் வியாபாரி. நேற்று மதியம், கன்னியம்மன் கோவில் இணைப்பு சாலை வழியாக சிப்காட் நோக்கி ஹோண்டா ஸ்பிளண்டர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று, அவரை முந்த முயன்றது. தடுமாறிய நாகராஜ், முன்னால் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு லாரியின் டயரில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ