உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீடியனில் பாதை ஏற்படுத்தி டூ -- -வீலர்கள் விபரீத பயணம்

மீடியனில் பாதை ஏற்படுத்தி டூ -- -வீலர்கள் விபரீத பயணம்

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே உள்ளது மகாலிங்க நகர். அப்பகுதியில், எதிர் திசையில் உள்ள சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டும் என்றால், 500 மீட்டர் தொலைவில், மேம்பாலத்தின் கீழ் உள்ள பாதையை பயன்படுத்த வேண்டும்.சுற்றி வருவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை மீடியனில் பாதை ஏற்படுத்தி, டூ - -வீலர்கள் ஆபத்தாக கடந்து வருகின்றனர்.அந்த பாதையை விபரீதமாக கடப்பதால் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகன ஓட்டிகளும் மீடியனை கடக்கும் டூ - -வீலர்களை கண்டு மிரண்டு போய் வேகத்தை குறைத்து அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மீடியனில் ஏற்படுத்திய பாதையை அடைக்க வேண்டும். மீறி கடப்பவர்கள் மீது, ஆரம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ