மேலும் செய்திகள்
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
10-Dec-2024
மணவாள நகர், மணவாள நகர் போலீசார் நேற்று முன்தினம் வெங்கத்துார் பகுதியில் உள்ள தெர்மாகோல் கம்பெனி அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் இரும்பு ராடுடன் நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் மணவாள நகர் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த ஆகாஷ், 19, காமேஸ்வரன், 19 மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் தெர்மாகோல் கம்பெனியில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது.இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், மூன்று பேரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆகாஷ், காமேஸ்வரன் ஆகிய இருவரையும் நீதிபதி உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை நீதிபதி உத்தரவுப்படி காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
10-Dec-2024