உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பில்லாத வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகம்

பராமரிப்பில்லாத வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகம்

திருமழிசை: வெள்ளவேடு வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகம் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து இருப்பதால், பயனாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். திருமழிசை அடுத்த வெள்ளவேடில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இங்கு, வெள்ளவேடு மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வளாகம் முறையான பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து இருப்பதோடு, வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. மேலும், இரவு மற்றும் விடுமுறை நாட்களில் மதுக்கூடமாகவும் மாறியுள்ளது. இதனால், இங்கு வரும் பயனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை