மேலும் செய்திகள்
கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் அபாயம்
20-Sep-2025
திருவாலங்காடு:காவேரிராஜபுரத்தில் கழிவுநீர் கால்வாய் துார்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகம் கால்வாய்களை முறையாக துார்வாராததால், கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ளது. இதுகுறித்து, திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், சில நாட்களாக அப்பகுதி மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாயை உடனே துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகு தி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Sep-2025