உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை துவக்க வலியுறுத்தல்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவையை துவக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவத்தை, அக்டோபர் மாதமே துவக்க வேண்டும் என, கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காடில் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு, மாவட்டம் முழுதிலும் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், 8,000 ஏக்கர் பரப்பளவில் பதிவு செய்து, கரும்பை அனுப்பி வைக்கின்றனர்.ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அரவை பருவம் துவங்கும். கடந்தாண்டு 20 கோடி கிலோ கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஒரு மாதத்திற்கு முன்னதாக அரவை பருவத்தை, ஆலை நிர்வாகம் துவக்க வேண்டும் என, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.முன்கூட்டியே அரவை பருவம் துவக்கப்படுவதால், அரவை நிறைவடையும் சமயத்தில், கரும்பு பயிர் முற்றி, எடை குறையும் வாய்ப்பு தவிர்க்கப்படும். மேலும், விவசாயிகளும் குறிப்பிட்ட பருவத்திலேயே கரும்பை அறுவடை செய்ய இயலும் என, எதிர்பார்க்கின்றனர்.கரும்பு விவசாயிகளின் கோரிக்கை குறித்து, தமிழக அரசுக்கு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில், முன்கூட்டியே அரவை பருவத்தை துவக்க பரிசீலனை செய்வதாக, கலெக்டர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை