உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஐரோப்பிய பெண்ணை கரம்பிடித்த ஊத்துக்கோட்டை வாலிபர்

ஐரோப்பிய பெண்ணை கரம்பிடித்த ஊத்துக்கோட்டை வாலிபர்

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் வசித்து வருபவர் கதிரவன். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர்களுக்கு உஷாநந்தினி என்ற மகளும், சூர்யகுமார், 29 என்ற மகனும் உள்ளனர்.சூர்யகுமார் 2021ல் ஐரோப்பிய யூனியன், லிதுவேனியா நாட்டிற்கு சென்று, அங்குள்ள கவுனாடெக்னிக்கல் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் படித்தார்.அதே நாட்டைச் சேர்ந்த ஐவோரிஸ் - ரேணாகா தம்பதியின் இரண்டாவது மகளான கமிலே டெக்னென்கைடே அதே பல்கலைக்கழககத்தில் படித்து வந்தார். சூர்யகுமார், அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.பின்னாலில் காதலாக மாறி இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் அங்கேயே திருமணம் செய்து கொண்டனர். தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டி இருவரும் இந்தியா வந்தனர்.நேற்று சூர்யகுமாரின் சொந்த ஊரான ஊத்துக்கோட்டை பெரியாண்டவர் கோவிலில் மேளதாளம் முழுங்க, கமிலே கழுத்தில் சூர்யகுமார் தாலி கட்டினார். இதில் மணமகனின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் கமிலேவின் பெற்றோர், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி