கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அவசியம்
திருத்தணி:கால்நடைகளுக்கு கட்டாயம் கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். திருத்தணி வருவாய் கோட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 7 வது சுற்று கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் கடந்த மாதம், 2ம் தேதி துவங்கியது. வரும் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நோய் பாதிப்பால் மாடுகள் உயிரிழக்க வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.தற்போது வரை 95 சதவீதம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகளுக்கும் உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் செயற்கை முறையில் கருவூட்டல் பணியாளர்கள் மூலம் அந்தந்த கிராமங்களுக்கே நேரில் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.