உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வல்லுார் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வல்லுார் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், தேசிய அனல்மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் இணைந்து, வல்லுார் அனல் மின்நிலையம் என்ற பெயரில், 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.இங்கு பல்வேறு நிலைகளில், 1,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்கள் பணிநிரந்தம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று வல்லுார் அனல்மின்நிலைய நுழைவு வாயிலில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினருடன் இணைந்து, அனல்மின்நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொழிலாளர்கள் பேசியதாவது:தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். போனஸ் வழங்க வேண்டும். ஒப்பந்த நிறுவனங்களை தவிர்த்து அனல்மின்நிலைய நிர்வாகமே நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், பெரிய அளவிலான போராட்டங்ளை முன்னெடுப்போம்.இவ்வாறு அவர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ