உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீரராகவ பெருமாள் இன்று ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருளல்

வீரராகவ பெருமாள் இன்று ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருளல்

திருவள்ளூர்:வேதாந்த தேசிகன் சாற்று மறை உற்சவத்திற்காக, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் இன்று ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருள்கிறார்.ஸ்ரீபெரும்புதுாரில் வேதாந்த தேசிகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், வேதாந்த தேசிகனின் 756வது சாற்று மறை உற்சவத்திற்காக, திருவள்ளூர் வைத்ய வீரராகவ பெருமாள் எழுந்தருள்வது வழக்கம். இதைமுன்னிட்டு, உற்சவர் வீரராகவ பெருமாள் நேற்று இரவு திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு, இன்று அதிகாலை ஸ்ரீபெரும்புதுாரில் எழுந்தருள்கிறார். இன்று, காலை 9:00 மணிக்கு அகோபில மடத்தில் இருந்து வீரராகவர் மாடவீதி வழியாக, வேதாந்த தேசிகன் சன்னிதியை அடைகிறார். மதியம், 1:30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. இரவு, வீரராகவ பெருமாள் மற்றும் வேதாந்த தேசிகன் ஆகியோர் பெரிய வீதியில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். இன்று முழுதும், வேதசாற்று மறை நடக்கிறது. நாளை அதிகாலை 5:30 மணியளவில் புறப்பட்டு, திருவள்ளூர் வந்தடைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ