திருத்தணி கோவிலுக்கு வாகனம் செல்ல தடை
திருத்தணி:முருகன் மலைக்கோவிலுக்கு நாளை முதல் இரு நாட்களுக்கு வாகனங்கள் செல்வதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு பெரும்பாலான பக்தர்கள் வாகனங்கள் மூலம் மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர். மலைப்பாதை சேதமடைந்து உள்ளதால், சீரமைக்கும் பணி நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இதனால், நாளை கோவில் பேருந்து மட்டும் இயக்கப்படும். நாளை மறுநாள் கோவில் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.