சிப்காட் சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் முதல் பிரதான சாலையில் நுழைந்ததும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அங்குள்ள உணவகம், டீக்கடைக்காக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அவ்வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகள், அப்பகுதியை கடக்க கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் சார்பில், ரோந்து படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த குழுவினர் முறையாக கண்காணிக்காததால், சிப்காட் வளாகத்தில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாக சாலையோரம், வாகனங்கள் நிற்காதபடி ரோந்து படையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க, சிப்காட் நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.