உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் மருத்துவமனையில் ஓ.பி., சீட் வாங்க காத்திருப்பு

திருவள்ளூர் மருத்துவமனையில் ஓ.பி., சீட் வாங்க காத்திருப்பு

திருவள்ளூர், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கூடுதல் கவுன்டர் இல்லாததால், ஓ.பி., சீட் வாங்க நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ஜே.என்.சாலையில் செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுக்கு முன், 160 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு அடுக்கு கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.இங்கு, பொது மருத்துவம், கண், பிசியோதெரபி, எலும்பு முறிவு, அவசர சிகிச்சை உள்ளிட்ட, பல்வேறு சிறப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. தினமும், 3,000க்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.புறநோயாளிகளுக்கு, தரை தளத்தில் ஓ.பி., சீட் வழங்கப்படுகிறது. நான்கு கவுன்டர்கள் உள்ள இந்த பிரிவில், தற்போது, இருவர் மட்டுமே, ஆண் மற்றும் பெண்களுக்கு, ஓ.பி., சீட் வழங்கி வருகின்றனர். காலையில், அதிகளவில் சிகிச்சை பெற நோயாளிகள் வருவதால், ஓ.பி., சீட் வழங்க ஏற்படும் தாமதத்தால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.இரண்டு கவுன்டர்கள் காலியாக இருந்தும், ஊழியர்கள் யாரும் அங்கு பணிபுரியாததால், வயதானோர், உடல் ஊனமுற்றோர், கர்ப்பிணியர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இங்கு, நோயாளிகள் அமர இருக்கை வசதியும் இல்லாததால், நீண்ட நேரம் நிற்க முடியாமல், நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, ஓ.பி., சீட் வழங்கும் இடத்தில், காலை நேரத்தில், கூடுதல் பணியாளர்களை அமர்த்தியும், நோயாளிகள் அமர இருக்கை வசதியும் செய்து கொடுக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ