உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவு நீர் லாரி கலெக்டர் எச்சரிக்கை

கழிவு நீர் லாரி கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் நகராட்சி மற்றும் மாவட்டம் முழுதும், வீடுகளில் தேங்கும் கழிவு நீரை, தனியார் லாரிகள் வாயிலாக அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு, கழிவு நீர் வாகனத்தில் கொண்டு வரும் கழிவு நீரை கூவம் ஆற்றில் கொட்டுவதாக புகார் வருகிறது.எனவே, கழிவு நீரினை கூவம் ஆற்றில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கழிவு நீர் வாகன உரிமையாளர்களிடம் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, வருவாய் துறை மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.கூட்டத்தில், கழிவு நீரை கூவம் ஆற்றில் கழிவு நீர் கொட்டாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும். மீறி கொட்டப்படுவதை கண்டறிப்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை