உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அழிஞ்சிவாக்கத்தில் வீணாகும் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

அழிஞ்சிவாக்கத்தில் வீணாகும் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

பொன்னேரி:சோழவரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜனப்பசத்திரம் பகுதியில், குப்பை கழிவை தரம் பிரித்து கையாள்வதற்காக, 15வது நிதிக் குழு மானியத்தில், 2.25 லட்சம் ரூபாயில் திடக்கழிவு மேலாண்மை உரக்குழி அமைக்கப்பட்டது.இதற்காக செவ்வக வடிவில் கான்கிரீட் கட்டுமானத்தில் இரண்டு குழிகள் அமைக்கப்பட்டன.ஊராட்சி நிர்வாகத்தால், குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து, மட்கும் பொருட்களை குழியில்போட்டு, அதன்மீது சாணம் தெளித்து, பதப்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.திடக்கழிவு மேலாண்மை உரக்குழி அமைந்து, இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், இதுவரை அதில் குப்பை கழிவை கொட்டி உரம் தயாரிக்கப்படவில்லை.மேற்கண்ட திட்டத்திற்காக செலவிட்ட நிதியும் வீணாகி உள்ளது. குப்பை கழிவை கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்கள், சுடுகாடு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டு, எரிக்கப்படுகின்றன.சோழவரம் ஒன்றிய நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ