உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 4,360 கன அடி நீர்வரத்து

பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 4,360 கன அடி நீர்வரத்து

ஊத்துக்கோட்டை, கிருஷ்ணா நீர், மழைநீர் மற்றும் சிட்ரபாக்கம் அணைக்கட்டில் இருந்து வந்து கொண்டு இருக்கும் நீரால், பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது.சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது.'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனிடையே, ஆரணி ஆற்றின் நீர், சிட்ரபாக்கம் அணைக்கட்டில் இருந்து கால்வாய் வாயிலாக பூண்டிக்கு திறக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணா நீர், மழைநீர் மற்றும் சிட்ரபாக்கம் அணைக்கட்டில் இருந்து செல்லும் ஆரணி ஆற்று நீர் ஆகியவற்றால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 330 கன அடி, ஆரணி ஆற்று நீர், 320 கன அடி, மழைநீர் 3,710 கன அடி என, மொத்தம், 4,360 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது, நீர்த்தேக்கத்தில், 1.8 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 30.30 அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி