உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு

பூண்டியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு

ஊத்துக்கோட்டை,திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் நடுவே பூண்டி கிராமத்தில் சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் உள்ளது. 1944ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கம் பூண்டி, சென்றாயன்பாளையம், மேட்டுப்பாளையம், பாண்டூர், பட்டரைபெரும்புதுார் என, 121 ச.கி.மீட்டர் துாரம் பரந்து, விரிந்து காணப்படுகிறது.இதன் மொத்த கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம் 35 அடி. மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கை கால்வாயில் வழியாக வரும் கிருஷ்ணா நீர் ஆகியவை முக்கிய நீராதாரம்.கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருப்பதால், இதன் கொள்ளளவு உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, 2.236 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம் 31.98 அடி. நேற்று காலை 10:00 மணிக்கு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 300 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணா நீர் 270 கன அடி வந்து கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !