வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உங்க ஆட்சியில athukku வாய்ப்பில்லை ....குடியல் மாடலில் எங்கே படித்து அறிவை வளர்த்து முன்னேறுவது?
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு பள்ளியில் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் துவக்க விழாவில் அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில் கற்றல் மையம் துவக்கப்பட்டுள்ளது என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் கே.ஈ.என்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று, அமெரிக்கன் இந்திய நிறுவனம் சார்பில், ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்று திறந்து வைத்தார். பின் அவர் பேசிய தாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து பள்ளிகளில், 1.38 கோடி ரூபாய் மதிப்பில், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக அமெரிக்கன் இந்திய நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் துவக்கப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் ஊதிய உயர்வு, பணிமாறுதல் உட்பட பல சலுகைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம். தற்போது, பகுதிநேர ஆசிரியர்கள் முழுநேர தொகுப்பூதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை குறித்து முதல்வரிடம் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பின், பள்ளி வகுப்பறையில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டார். அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரி கூட்டரங்கில், அரசு பள்ளி தலைமையாசிரியர்களுடன் மாநில அளவிலான அடைவு தேர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதன்பின், 4.66 கோடி மதிப்பில், 13 பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார். பின், 100 பள்ளிகளுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பில் கற்றல் திறனை மேம்படுத்தும் திறன் பலகைகள், 12 லட்சத்தில் மகிழ் முற்றம், 50 லட்சம் ரூபாயில் ஐந்து பள்ளிகளில் அறிவியல் களம் உட்பட, மொத்தம் 9.28 கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்களை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.
உங்க ஆட்சியில athukku வாய்ப்பில்லை ....குடியல் மாடலில் எங்கே படித்து அறிவை வளர்த்து முன்னேறுவது?