உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேலை நிறுத்தம் செய்ய நெசவாளர்கள் தீர்மானம்

வேலை நிறுத்தம் செய்ய நெசவாளர்கள் தீர்மானம்

ஆர்.கே.பேட்டை:விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு கேட்டு, நாளை முதல் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.இதற்காக, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வேலை நிறுத்தை மேற்கொள்ள உள்ளனர்.இத்னபடி, ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, வங்கனுார், பொதட்டூர்பேட்டை, புச்சிரெட்டிபள்ளி, மத்துார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், குருவராஜபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்கள், நாளை முதல், தறிக்கூடங்களில் வேலை நிறுத்தம் செய்ய, நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ