உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருப்பதி திருக்குடைகளுக்கு வரவேற்பு

திருப்பதி திருக்குடைகளுக்கு வரவேற்பு

கடம்பத்துார்:ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், திருப்பதி கொண்டு செல்லப்படும் திருக்குடைகளுக்கு, மணவாளநகர் பக்தர்கள் நேற்று வரவேற்பு அளித்தனர். ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோத்சவத்திற்காக, 'ஹிந்து தர்மார்த்த சமிதி' சார்பில், 22வது ஆண்டாக திருக்குடை ஊர்வலம், கடந்த 22ம் தேதி துவங்கியது. சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் நடந்த துவக்க விழாவில், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் மற்றும் விஷ்வ ஹிந்து கேந்திராவின் பொதுச் செயலர் கிரிஜா சேஷாத்ரி ஆகியோர் பங்கேற்றனர். சென்னையில் துவங்கிய 11 திருக்குடைகள் ஊர்வலம், நேற்று காலை திருவள்ளூர் மணவாளநகர் பகுதிக்கு வந்தது. இந்த திருக்குடைகளுக்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மணவாளநகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த திருக்குடைகள், திருவள்ளூர், திருப்பாச்சூர், கனகம்மாசத்திரம் வழியாக, இன்று திருமலை சென்றடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை