உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்டாவிற்கான இடம் எங்கே? பூவலை மக்கள் ஆர்ப்பாட்டம்

பட்டாவிற்கான இடம் எங்கே? பூவலை மக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி:எட்டு ஆண்டுகளுக்கு முன் வழங்கிய வீட்டுமனை பட்டாவிற்கான நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வலியுறுத்தி, பூவலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே பூவலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு, 2017ம் ஆண்டு, 97 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன. ஒதுக்கிய நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வலியுறுத்தி, பலமுறை கும்மிடிப்பூண்டி தாசில்தார் முதல் கலெக்டர் வரை மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து, பூவலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசை கண்டித்தும், உடனடியாக நிலத்தை அளவீடு செய்து, அந்தந்த பட்டாதாரருக்கு ஒப்படைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ