உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி துணைமின் நிலையத்தில் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்படுமா?

கும்மிடி துணைமின் நிலையத்தில் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்படுமா?

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி துணைமின் நிலையத்தில், மழை வெள்ளம் புகாமல் இருக்க, கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து கும்மிடிப்பூண்டி நகர் மற்றும் சுற்றியுள்ள, 40க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. துணைமின் நிலையத்தையொட்டி, ஏரிகளின் உபரிநீர் செல்லும் கால்வாய் அமைந்துள்ளது. தொடர் மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து, துணை மின் நிலையத்தில் சூழந்து விடும். இதனால், மழை வெள்ளம் வடியும் வரை, மின் வினியோகம் பாதிக்கப்படும். கடந்த 2023 டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது, கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், மூன்று நாட்களுக்கு மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. எனவே, மக்களின் நலன் கருதி, கால்வாய்க்கும், துணை மின் நிலையத்திற்கும் இடையே கான்கிரீட் தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ