உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சென்னை- திருப்பதி பேருந்து நாராயணபுரத்தில் நிற்குமா?

சென்னை- திருப்பதி பேருந்து நாராயணபுரத்தில் நிற்குமா?

திருவாலங்காடு:சென்னை --- திருப்பதி செல்லும் தடம் எண்:201 பேருந்து நாராயணபுரத்தில் நின்று செல்ல வேண்டும் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10 கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவள்ளூர் ----- திருத்தணி சாலை மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது நாராயணபுரம் கிராமம். இந்த கிராமம் வழியாக தினமும் தடம் எண்: 97 மற்றும் 201 அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளை நாராயணபுரம் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மஞ்சாகுப்பம், வரதாபுரம், கூடல்வாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திருவள்ளூர், திருத்தணி நகரங்களுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சென்னை ---- திருப்பதி வரை திருத்தணி வழியாக செல்லும் தடம் எண்:201 அரசு பேருந்து தினமும் இயக்கப்படுகிறது. இப்பேருந்து நாராயணபுரம் வழியாக செல்லும் நிலையில், அங்கு நிறுத்தி இயக்க வேண்டும் என, நாராயணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை