உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீத்தஞ்சேரி அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

சீத்தஞ்சேரி அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பழைய கட்டட கழிவுகளை அகற்ற உடைக்கப்பட்ட சுற்றுச்சவரை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பூண்டி ஒன்றியம், சீத்தஞ்சேரி அரசு தொடக்கப் பள்ளி, 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம் பழுதடைந்ததால், 25 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு கட்டடம் கட்டப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்டது. இக்கழிவுகளை எடுத்து செல்வதற்காக, சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கழிவுகள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் சுற்றுச்சுவரை சீரமைக்கவில்லை. தற்போது வரை இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் அப்படியே உள்ளது. அருகில் வயல்வெளி உள்ளதால், பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் உலா வருகிறது.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இடிக்கப்பட்ட சீத்தஞ்சேரி அரசு தொடக்கப் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை