உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது வி.ஜி.கே.புரம் கிராமம். இங்கு அரசு துவக்கப்பள்ளி எதிரே, திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில், 2017 - 18ம் ஆண்டு 5 லட்சத்து 50,000 ரூபாய் மதிப்பில் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஒருவாரம் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நவீன சுத்திகரிப்பு நிலையம் 6 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இன்றி, மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் கோடை காலத்தில் கூடுதல் குடிநீரின்றி தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி