உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெல் தரம் பிரிக்கும் கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

நெல் தரம் பிரிக்கும் கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் ஊராட்சியில் கிராம சேவை மையத்தின் பின்புறம் நெல் தரம் பிரிக்கும் கூடம் அமைந்துள்ளது.கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பில், நெற்களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெல் தரம் பிரிக்கும் கூடம் செயல்படாமல் பூட்டிக் கிடப்பதால், கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலே பாழாகும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.வரும் அறுவடை பருவத்தில், பழையனுாரில் நெல் தரம் பிரிக்கும் கூடத்தை, நெல் கொள்முதல் நிலையமாக அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி