மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்றிய பா.ஜ., நிர்வாகிக்கு வெட்டு
19-Sep-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மகள் சலோமியா, 25. கடந்த 22ம் தேதி சலோமியா வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, அதிகாலை 3:30 மணியளவில் விஷப்பூச்சி அவரது வலது காலில் கடித்தது.இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சலோமியா உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
19-Sep-2024