உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டாள், 45. இவர், கடந்த 9ம் தேதி அரக்கோணத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு, மகன் மோகன்ராஜ் உடன் 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.திருவள்ளூர் --- அரக்கோணம் நான்கு வழிச்சாலையில், புண்டரீகபுரம் அருகே வந்த போது, திடீரென மோகன்ராஜ் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது, ஆண்டாள் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.இதில், தலையில் பலத்த காயமடைந்தவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ