மேலும் செய்திகள்
ஆக்கிரமிக்கும் டூ - வீலர்கள் ஆவடி சந்தையில் அவதி
03-Jan-2025
ஆவடி:ஆவடி, ஜீவானந்தம் நகர், ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 24. மொபைல் போன் கடையில் பணிபுரிந்து வருகிறார்.இவர், தந்தை ஸ்ரீனிவாசலு, 50, தாய் தனம்மாள், 47, அண்ணன் பிரேம்குமார், 24, மற்றும் தங்கை ஜெனிபர், 20, ஆகியோருடன் வசித்து வருகிறார்.இவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பியூலா, 22, என்பவரை காதலித்து, கடந்த 2023ல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதில், ராஜ்குமார் குடும்பத்தினர் யாருக்கும் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.நேற்று முன்தினம், அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில், தனம்மாள் மற்றும் பியூலா மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். கழுத்தில் காயங்களுடன் பியூலா, மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி போலீசார், பியூலா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேகத்தின்படி, ராஜ்குமார் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் இறந்ததால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
03-Jan-2025