உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் சரமாரி புகார்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் சரமாரி புகார்

திருத்தணி: வேலஞ்சேரி கிராமத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், பங்கேற்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரனிடம் பெண்கள், கழிவுநீருடன் குடிநீர் கலந்து வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு எனவும் புகார் தெரிவித்தனர். திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று துவக்கி வைத்தார். அப்போது, 30க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.எல்.ஏ., விடம் வேலஞ்சேரி காலனியில், குடிநீர் வினியோகம் செய்யும் பைப் சேதமடைந்து ஒரு மாதமாகியும் சீரமைக்காததால் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. மேலும், ஒரு சில தெருக்களில் கழிவுநீருடன் குடிநீர் கலந்து வருவதால், தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. சுகாதார பணிகள் முறையாக செய்வதில்லை என ஊராட்சி நிர்வாகம் மீது பெண்கள் சராமாரியாக குற்றம் சாட்டினர். இதையடுத்து எம்.எல்.ஏ., சந்திரன், ஒன்றிய அதிகாரிகளை அழைத்து கண்டித்தார். மேலும், குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளில் சுணக்கம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எம்.எல்.ஏ., எச்சரித்தார். முகாமில், வருவாய் துறை, மின்சாரம், ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரம் உட்பட, 15க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டு, 300 பேரிடம் இருந்து மனுக்கள் பெற்றனர். l கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றிய அலுவலர் சவுந்தரி , நடராஜன் தலைமையில் நடந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தி.மு..க.,- எம்.எல்.ஏ., வி.ஜி. ராஜேந்திரன் பங்கேற்று பகுதி மக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த முகாமில் 552 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட மொத்தம் 1,020 மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ