உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கலெக்டர் வருகை எதிரொலி ஊத்துக்கோட்டையில் பணி விறுவிறு

கலெக்டர் வருகை எதிரொலி ஊத்துக்கோட்டையில் பணி விறுவிறு

ஊத்துக்கோட்டை:'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் இன்று நடைபெற உள்ளது. கலெக்டர் பிரதாப் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.மேலும், மாலை 4:30 மணிக்கு ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து மனுக்களை பெறுகிறார்.கலெக்டர் ஊத்துக்கோட்டை வருவதை ஒட்டி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், உயர்மின்கோபுர விளக்கு, பேருந்து நிலையத்தில் எரியாத விளக்குகள், பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள குப்பை கழிவு அகற்றப்பட்டன. பேருந்து நிலைய கழிப்பறை பணி துரித கதியில் நடக்கிறது.தாலுகா அலுவலகத்தில் சுத்தம் செய்யப்பட்டு, மக்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுத்தம் செய்யப்பட்டது. அரசு பொது மருத்துவமனை, சார் - பதிவாளர் அலுவலகம் ஆகியவை துாய்மையாக மாற்றும் பணிகள் நடக்கிறது.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறுகையில், 'கலெக்டர் ஆய்வு செய்ய வருகிறார் என்பதற்காக, அலுவலகங்கள், பொது இடங்கள் துாய்மையாக வைத்துக் கொள்ளும் நடவடிக்கை நடக்கிறது. உயர் அதிகாரி வரும் போது நடக்கும் பணிகள், தினமும் நடந்தால் துாய்மையாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் மாறினாலும்...காட்சிகள் மாறவில்லை?

ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் பின்புறம் ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகள் உள்ளன. பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மீன் மார்க்கெட் ஏல முறையில் வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இங்கு, மீன் விற்கும் வியாபாரிகள், ஆண்டிற்கு 16,000 ரூபாய் வாடகை செலுத்துகின்றனர். ஆனால், இவர்களுக்கு சரியான இடத்தை பேரூராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. கூரை இல்லாத நிலையில், தார்ப்பாய் போட்டு வியாபாரம் செய்கின்றனர். கடந்தாண்டு, அப்போதைய கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்த போது, மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார். ஆனால், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்று, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்திற்கு வரும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி