மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
கும்மிடிப்பூண்டி; ஒடிசா மாநிலம், கன்ஜம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்தர புருஷ்டி, 27. கும்மிடிப்பூண்டி காட்டுக்கொல்லை தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.சிப்காட் வளாகத்தில், உள்ள, 'டான்பிளாக் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிட்.,' என்ற வாகன பிரேக் பேட் மற்றும் டிஸ்க் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு பணி செய்து கொண்டிருந்த போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.