உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

 மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பொன்னேரி: இறால் பண்ணையில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அசாம் மாநிலம், கர்பி அங்கலாங் பகுதியைச் சேர்ந்தவர் பிரோபின் கோகய், 38. இவர், பொன்னேரி அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள இறால் பண்ணையில், இரண்டு மாதங்களாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இறால் பண்ணையில் உள்ள மின் சாதனத்தை இயக்கும்போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ