உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கெலை: ஒருவர் கைது

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கெலை: ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் டிக்னேஷ்வர லோரா, 23. கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில், 'ஸ்ரீராம் இன்ஜினியரிங்' என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் தொழில்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இவர், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு மாடியில், சக தொழிலாளியான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உதித், 22, என்பவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் உதித், டிக்னேஷ்வர லோராவை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார், உதித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை