உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு

கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் சடா, 21. கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில், பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். அந்த வளாகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் ஷெட்டில், அவர் வசித்து வந்த அறையில், நேற்று முன்தினம், மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் உள்ள பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக தெரிவித்தனர். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ